நியுட்டனின் மூன்றாம் விதி

April 12, 2008

பேய்கள் என்பதெல்லாம் பொய்கள் என்றிருந்தேன்

உன்னைக் காணும்வரை….

நியுட்டனின் மூன்றாம் விதிப்படி  அவை இருப்பது மெய்தான்

தேவதையாய் நீ இருக்கும் வரை….

நீயும் நானும்

February 21, 2008

புத்தகத்தை பொதி சுமந்தாய்

கை வீசி சென்றேன் சூளைக்கு

கண் விழித்து களைத்தாய்

களைத்திருந்ததால் கண்ணயர்ந்தேன்

உனக்கு காதல் தந்த வலி மறக்க மது

எனக்கு வலி மரக்க….

லட்சங்களில் லட்சியம் நிறைவேறவில்லை வருந்தினாய்

இக்கூலிக்கு இனி அரிசி சோறு என்று என்னும்போதே பொங்கியது மனம்

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வெற்றியை நூலிழையில் தவறினாய்

நான் வெற்றி பெற தோல்வி இருந்தது எப்போதும்

என்னை படைத்தவன் தானே படைத்தான் உன்னையும்

பாவம் தான் நீ  

இதயம்

November 15, 2007

கல்லுக்கும் ஈரம் உண்டாம்   

பின் எதனால் தான் ஆனதடி

உன் இதயம் 


Follow

Get every new post delivered to your Inbox.